கண்டியில் அமைந்துள்ள லைட்ஹவுஸ் தேவாலயத்தின் ஒரு கிளைச்சபையும், ஸ்ரீலங்கா, சுயாதீனச் சபையின் அங்கத்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா, மட்டக்களப்பில் அமைந்துள்ள சீயோன் தேவாலயம், 1973ம் ஆண்டில், போதகர் வேர்கீஸ் சான்டியினால் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சுவிஷேச கூட்டத்தின் மூலம் உருவானது. அந்த கூட்டங்களுக்கு உதவி ஊழியராக வந்த போதகர்.இன்பம் மோசஸ், அவருடைய மனைவி ரஞ்சி மோசஸ் தேவனுடைய தெளிவான சத்தத்தைக் கேட்டு, வீடுகள்தோரும் ஜெபக்கூட்டங்களை மிகுந்த ஜெபத்தோடான தலைமைத்துவத்தோடு ஒரு சில விசுசவாசிகளை நடத்தி வந்த ஊழியம், தற்போது போதகர். றொஷான் மெகேசனின் வல்லமையாக தலமைத்துவத்தினால் இன்று பெரிதான ஊழியமாக மாறிவிட்டது.
ஏப்ரல் 21ம் திகதி எமது ஆலயத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பிற்கு பின்னதாக, சகோ.ச.ரமணதாஸினால் சீயோன் தேவாலயத்திற்கு கொடுக்கப்பட்ட காணியிலும், அதைத் தொடர்ந்து சபையினால் வேண்டிக்கொள்ளப்பட்ட கணியிலும், எமது சபைக்கு திறளாய் வந்துகொண்டிருப்போர், சகமாய் தேவனை ஆராதித்துவிட்டுச் செல்லத்தக்கதான ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள்ளே, பிரதான வீதியிலிருந்து 450 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊழியம் தொடங்கின நாள் முதல், இங்கே நடக்கின்ற ஆராதனைகளினாலும், போதிக்கப்படுகின்ற ஆவிக்குரிய சத்தியங்களினாலும், ஐக்கித்ினாலும் பல நூற்றுகணக்கான குடும்பங்களுக்கு தேவ வெளிச்சத்தையும், நம்பிக்கையும் பெற்று வருகின்றனர்.
நீங்கள் எந்தவொரு ஆலயத்திற்கும் செல்லாதவராக இருந்தால், எம்முடன் இணைந்து தேவனை ஆராதிக்க உங்களை அன்போடு அழைக்கின்றோம்.