CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா?

.
ஆவியின் கனியோ, அன்புசந்தோஷம்சமாதானம்நீடிய பொறுமைதயவுநற்குணம்விசுவாசம்சாந்தம்இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
.
இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம்.
.
கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம்.
.
பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்-
ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார்.
.
நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார்.
.
கிறிஸ்துவுக்குள் வாழும் நம் அனைவரும் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் சொல்லிய ஸ்திரியைபோல இருக்க வேண்டும்.
.
அவள்-
அதிகாலை எழும்பி வேலை செய்கிறாள்.
.
தூரத்திலிருந்து ஆகாரத்தை கொண்டு வருகிறாள்.
.
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுக்கிறாள்.
.
தன் வேலைகாரிகளுக்கு படியளக்கிறாள்.
.
வயலை விசாரித்து வாங்குகிறாள்.
.
திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
.
சிறுமைப்பட்டவர்களுக்கு தன் கையை திறந்து ஏழைகளுக்கு தன் கரங்களை நீட்டுகிறாள்.
.
தன் வாயை ஞானம் விளங்க திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
.
அவள் சோம்பலின் அப்பத்தை புசியாமல் தன் வீட்டு காரியங்கள் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாய் இருக்கிறாள்.
.
அவள் பிள்ளைகள் எழும்பி அவளை பாக்கியவதி என்கிறார்கள்.
.
அவள் புருஷன், அநேக பெண்கள் குணசாலிகளாய் இருந்தது உண்டு. நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்ப்பட்டவள் என்று அவளை புகழுகிறான்.
.
கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே புகழப்படுவாய்.
.
ஆம், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே நீ புகழப்படுவாய்.