ஞாயிறு காலை ஆராதனை வேளை. பாடல்கள் முடிந்ததும் வயது முதிர்ந்த பாஸ்டர் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழும்பி மெள்ள நடந்து பிரசங்க பீடத்தை அடைந்தார். அன்று தேவ செய்தி அளிக்க வந்திருப்பவரைக் குறித்து மிகச் சுருக்கமாக சபையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “தேவ செய்தி அளிக்க வந்திருப்பவர் என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்” என்று மாத்திரம் சொல்லி விட்டு இறங்கிவிட்டார். நடுத்தர வயதைத் தாண்டிய செய்தியாளர் பிரசங்கபீடத்தில் ஏறினார். பிரசங்கத்தை ஆரம்பித்தார். . “ஒரு தகப்பனார், அவருடைய மகன், மகனுடைய நண்பன் மூவரும் ஒருநாள் பசிபிக் கடலில் படகில் உல்லாசப் பயணம் செய்தனர். நண்பர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. கரையை ஒட்டியுள்ள பகுதியில் தான் பயணம் செய்து கொண்டு இருந்தனர். […]
(உவில் லாங்நெக்கர் ஓர் அமெரிக்க மிஷனெரி. ரோதா அவரது மனைவி. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் ப்ராட். ப்ராட் எப்படி மனம்மாறினான் என்பதை தந்தை உவில் இங்கே சாட்சியாகச் சொல்லுகிறார்). . “நானும் வரணுமா? சே, மோசம்! காரும் ஓட்டக்கார்! அதில் எட்டுப்பேர் பள்ளி மூட்டைபோல் அடைய வேணும்! அப்படி 6000 மைல் கை, காலை அசைக்க முடியாது. நீங்கள் எல்லாரும் போங்கள். நான் வீட்டில் என் நண்பரோடு இருக்கிறேன்” என்றான் என் மூத்த மகன் ப்ராட். . 1976-ம் ஆண்டு ஈஸ்டருக்கு முன் என் பிள்ளைகளுக்கு விடுமுறை. டொரண்டோ நகர்ப் பகுதியில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டேன். குடும்பமாகச் சென்று ஊழியம் செய்வது மிகுந்த பயன்தரும் எனக்கருதி குடும்பமாகப் புறப்பட்டோம். . என் […]
அன்புள்ள மனைவியை அடக்கம் செய்துவிட்டு தன்னுடைய ஒரே மகளைத் தோளின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் தன்னை அழுத்த வேதனையோடு வீடு திரும்பினான் கணவன். அவள் ஆண்டவருடன் வாழச் சென்றவிட்டாள். அவனுடைய அகன்ற, பலமான தோள் பலம் குன்றி ஒடுங்கிவிட்டதை தோளில் உட்கார்ந்திருந்த மகள் உணர்ந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாமல் தேங்கித் தேங்கி அழுது கொண்டிருந்தாள் மகள். மகளுக்கு அன்புத் தாயில்லாமல் கணவனுக்கு அன்பு மனைவி இல்லாமல் வீடு இருவருக்கும் வெறுமையாகக் காட்சியளித்தது. . இரவு வேளை வந்தது. மகள் அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிப் பழகியவள். இரவு வேளையையும் மீறிய காரிருள் தங்களைச் சூழ்ந்து கொண்டதை இருவரும் உணர்ந்தனர். மகள் அப்பாவின் காதருகே வந்து மெதுவாக “டடி இன்று […]
கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய் யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா.. கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அவரை ஜெபித்து அனுப்பி வையுங் கள். திரும்பி வந்ததும் ப்ரைஸ் தெ லார்ட் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் யென்று சொல் லுங்கள். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்கு வாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். . அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான் என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது […]
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே, சமாதானத்தால் ஆசீா்வதித்து தமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கும் (சங்.29.11,149.4) மகிமையின் கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். எத்தனை பாடுகள், இடறல்கள், இன்னல்கள் வந்தாலும் சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்த சந்தோஷத்தை தேவன் தமது பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார் அல்லேலூயா (1பேதுரு 1.8). விசுவாசத்திலே நிலைத்திருங்கள், நீடித்திருங்கள், நிரம்பியிருங்கள் (1கொரி 16.13). நமது சந்தோஷம் கர்த்தருக்குள் (பிலி 4.4) நமது சிந்தையை, யோசனையை, நினைவை, கற்பனையை (imagination), மனப்பான்மையை கவனமாக வைத்துக் கொள்வோம். நமது நினைவு மண்டலத்தில் நன்மையை யோசிக்க யோசிக்க கிருபையும் சத்தியமும் கடந்து வரும் (நீதி 14.22) நமது நினைவின் படி தான் நாம் வாழ முடியம் (நீதி 23.6). பிலிப்பியர் நிரூபத்தில் பவுல் எழுதியது போல ஒரே […]
“1958-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9-ம் தேதி என் வாழ்வில் மறக்க மடியாத நாள். ஏனெனில் அன்று இரவுதான் என் டெலிவிஷன் பெட்டியை விற்க முடிவு செய்தேன். அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. குவென்னும்(மனைவி) குழந்தைகளும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பளிச்சென்று தெரியும் பட்டாடை அணிந்த மங்கையர் நடந்து செல்லும் ஒரு அலுப்புத் தட்டும் காட்சியை ஒளிபரப்பியது. ஒளிக்காட்சி காண்போரின் மனதைக் கவரும். அந்தப் பெண்ணின் உருவமோ அல்லது அலுப்புத்தட்டும் அவள் கதையோ என் உள்ளத்தைக் கவரவில்லை. எவ்வளவு முயன்றும் என் மனம் ஏனோ அதில் லயிக்கவே இல்லை. நான் சற்றென்று எழுந்து அந்த ஒளிக்காட்சியை நிறுத்தினேன். அந்த அழகிய பெண்கள் மறைந்தனர். நான் எழுந்து […]
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். (சங்கீதம் 37:4) கவலை ஒரு கலையா? மனிதர்களை மரணம் தேடி வருவதில்லை, கவலைப்படுவதினால் இவர்களே தேடிபோய் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள் என்றார். ஒரு பிரபல மனநல மருத்துவர். தேவன் தங்களுக்கு வைத்துள்ள சந்தோஷத்தை அனுபவியாமல், தேவையில்லாத மனக்குழப்பத்தால் தங்கள் ஆயுளை குறைத்து கொள்வோர் பலர். கிறிஸ்தவர்களால் அதிகம் வாசிக்கப்பட்டும், பலருக்கு மனப்பாடமாய் தெரிந்திருந்தும், ஒருமுறைகூட கீழ்ப்படியாத வசனம் “கவலைப்படாதிருங்கள்” என்பதாகத்தான் இருக்கும். இயேசு இந்த வசனத்தை ஆலோசனையாக சொல்லாமல் கட்டளையாக சொல்லுகிறார். எனவே நாம் கவலைப்படும்போது கட்டளையை மீறுகிறோம், அதாவது பாவம் செய்கிறோம். ஆம்! கவலைப்படுவது பாவம். சிலர் நேரம் ஒதுக்கி கவலைப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் கட்டாயம் கவலைப்பட்டே ஆக வேண்டும் […]
நாவிற்கு உன்னை அழிப்பதற்கும், வாழ்விப்பதற்கும் வல்லமையுண்டு. ஒரே நாவிலிருந்து ஆசீர்வாதமும் சாபமும் வெளிவருகிறது. அவ்வாறிருக்கக் கூடாது. இயேசுவானவரின் வார்த்தைகள் மிகத்தெளிவாயிருக்கின்றன. “இதயத்தின் நிறைவால் வாய் பேசும்.” உனது இதயம் வார்த்தைகளால் செயல்படுகிறது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் வருகிறது. பயம் பிசாசின் வார்த்தைகளைக் கேட்பதினால் வருகிறது. சில கிறிஸ்தவர்கள் தங்களது எதிரியாகிய பிசாசு சொல்லும் வார்த்தைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். சரியான அறிவுள்ள எவனும் தன்னைப்பற்றி தன்னுடைய விரோதி சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் உன் எதிரியின் வார்த்தைகள் உனக்கு விரோதமாகச் சொல்லப்பட்டவை. உன்னைப்பற்றி உன் எதிரி சொல்வதெல்லாம் திருடன், பொய்யன், பாவி என்பதே. அதை நீ ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? உன் வார்த்தைகளைக்கொண்டு உன்னை பிடிக்க வேண்டுமென […]
அன்னாள் மனம் உடைந்து வேதனைப்பட்டு சக்களத்தியினால் அவமானப்பட்டு குழந்தைப் பாக்கியம் இல்லை என்று கண் கலங்கினாள். எல்கானாவாகிய அவளது கணவர் இரண்டாவது மனைவி பெனினாளையும், பத்துப்பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிகபாசம் உள்ளவனாக இருந்தார். பெனினாளுக்கு, பிள்ளைகளுக்கும் ஒரு மடங்குகொடுத்தால், அன்னாளுக்கு இரண்டு மடங்கு கொடுப்பார். ஆனால் அன்னாளுக்கு தனக்கு குழந்தை இல்லை என்றவேதனை பெருமூச்சாகவும், ஆறாத்துயராகவும் கண்ணீருடன் இருந்து. பிள்ளைப் பாக்கியம் எனக்கில்லையே என்ற வேதனையுடன் தனது உயிரை தற்கொலை செய்யப்போவதில்லை மாறாக தேவனுடைய ஆலயத்திற்கு ஓடினாள். அங்கே சந்நிதானத்தில் அமர்ந்திருந்து கண்ணீரோடு அழுது அழுது முழங்கால் படியிட்டு சத்தம் வெளிவராமல் மௌனமாக ஜெபித்தாள். தன் மனப்பாரங்களை ஆண்டவரின் பாதத்தில் கண்ணீரால் ஜெபத்தோடு ஊற்றினாள். அவள் மனம் கசந்து “சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உமது […]
சங்கிலி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பும்பொழுது ஒரு அம்பாசிடர் கார் நிறைய பொருட்களோடு வந்திறங்கினான். கழுத்திலும் கையிலும் தங்கம் மினுங்க ஒரு தோற்றம். அது பக்கத்துவீட்டு கண்மணியின் கண்ணில் பட தன் கணவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் உருவாகியது. . ஒன்றிரெண்டு நாட்கள் மனதில் அடக்கிவைத்த அந்த காரியம், அவளுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது. . அது அவள் மனதை உடைத்து வெளியே வந்த வார்த்தை. நீரும் இருக்கிறீரே பக்கத்து வீட்டு சங்கிலியைப்பாரும், என்று அடுக்க ஆரம்பித்த அவள், நீரும் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று முடித்தாள். . பாவம் அன்னார், சற்று நேரம் அமைதியாக இருந்தார். நம்ம […]