‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ (நெகோமியா 13:31). வேதத்திலுள்ள 66 புத்தகங்களும் ஒவ்வொரு விதமாக முடிவடைகின்றன. சில புத்தகங்கள் துதியோடு முடிவடைகிறது. பல புத்தகங்கள் வாழ்த்துக்களோடு முடிவடைகிறது தீர்க்கத்தரிசனங்களோடும் முடிவடைகிறது. ஏன் புலம்பலோடும் கூட ஒரு புத்தகம் முடிவடைகிறது. ஆனால் இந்த 66 புத்தகத்திலும் ஒரே ஒரு புத்தகம் ஜெபத்தோடு முடிவடைகிறது. ஆம்! நெகேமியா ஒரு பெரிய ஜெபவீராராக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஜெபத்தோடு கர்த்தருக்காக பெரிய காரியத்தை செய்து இறுதியில் ‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ என்று வேண்டிக்கொள்கிறார். ஒரு மனிதன் நம்மை நினைத்தருள வேண்டுமென நாம் எதையெதையோ செய்கிறோம். எப்படியாகிலும் அவரிடத்திலிருந்து நன்மையை பெறவேண்டுமென்று பல வழிகளில் பிரயாசப்பட்டு […]