மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசியர் 6:8) வீதியின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருப்பு தைத்துக்கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக்கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்த பிறகு, அவனது தாயை கவனிக்க அது கைகொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ்போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய், நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான். எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், மிகவும் சிரமத்தை எடுத்து கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும் மற்றவர்களிடம் இல்லாத ஏதோ […]